குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் தர்ப்பண பூஜை வழிபாடு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட லிங்க வடிவிலான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் பக்தர்கள் காசி தீர்த்தம் இட்டு காசி விஸ்வநாதரை தொட்டு வணங்குவது வழக்கமாகும்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.

முன்னதாக சன்னதி எதிரே யாகம் வளர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் கோயிலுக்கு வந்து தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பண பூஜை வழிபாடு நடத்தினர்.

பூஜைக்கான பொருள்கள் கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. தர்ப்பண பூஜை செய்த மக்கள் பின்னர் காசி விஸ்வநாதருக்கு காசி தீர்த்தம் இட்டு தொட்டு வணங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி எஸ்.பி தேவர் செய்திருந்தார்.

திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் உள்ள கிரிகை பொட்டலில் தர்ப்பணம் செய்ய வந்த மக்களை அங்கிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேலும், கிரிகை பொட்டலுக்கு வரும் வழிகளையும் போலீசார் தடுப்புகள் கொண்டு அடைத்திருந்தனர். திருப்புவனம் அருகே வைகை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள தென்னந்தோப்புகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com