சென்னையில் 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

சென்னையில் 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

சென்னையில் தி.நகர் உள்பட 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தி.நகர் உள்பட 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜாா் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளை ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. 
தற்போது இந்த தடை உத்தரவு நாளை காலையுடன் முடிவடையும் நிலையில் 9 இடங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் வழக்கம்போல செயல்பட சென்னை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது. மேலும் கடைகள், வணிக வளாகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com