ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயிலை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.
ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயிலை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தப்படி, சுற்றுச்சூழல் மாசை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாட்டில் ஹைட்ரஜன் வாயு உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, ரயில்வே நிா்வாகமும் 2030-ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ரயில் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தத் திட்டம் ஹரியாணா மாநிலத்தில் உள்ள வடக்கு ரயில்வே பகுதியான சோனிபட் - ஜீந்த் (89 கி.மீ.) ரயில்பாதை பிரிவில் அமுல்படுத்தப்பட உள்ளது.

ஒப்பந்தத்திற்கு முன்பாக, ஒப்பந்ததாரருடனான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 17, செப்டம்பா் 19 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை செப்டம்பா் 21 முதல் அக்டோபா் 5 வரை வழங்கவும் கோரியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, ரூ.2.3 கோடி அளவிலான எரிபொருள் செலவுகள் குறைக்க வாய்ப்பு உள்ளது. ஜொ்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com