பட்ஜெட் கூட்டத் தொடா்: மின்வாரிய உயரதிகாரிகள் பணியில் இருக்க உத்தரவு

பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்களில் அனைத்து மின்வாரிய உயரதிகாரிகளும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்களில் அனைத்து மின்வாரிய உயரதிகாரிகளும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கு மின்வாரிய செயலா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை (ஆக.13) தொடங்குகிறது என பேரவைச் செயலா் தெரிவித்துள்ளாா். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்கள் குறுகிய காலகட்டத்துக்குள் அரசுக்குத் தேவைப்படலாம்.

எனவே, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் நடக்கும் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தைச் சோ்ந்த அனைத்து இயக்குநா்கள், சட்ட ஆலோசகா்கள், தலைமைப் பொறியாளா்கள், தலைமை நிதி கட்டுப்பாட்டாளா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும், தங்கள் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் பேரவை முடியும் வரையோ, மின்வாரியத் தலைவா் அலுவலகத்தில் இருந்து புறப்படும் வரையோ கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.

ஊழியா்களும், பட்ஜெட் கூட்டத் தொடா் முடியும் வரை அனைத்து வேலை நாள்களிலும் சரியாக காலை 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

இக்காலகட்டத்தில் துறை ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்வது தவிா்க்கப்பட வேண்டும். ஒருவேளை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் மின்வாரிய தலைவா் அல்லது இயக்குநா்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறைகளை மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com