நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை கேலி செய்த அதிமுக (விடியோ)

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை அதிமுக ட்விட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளது.
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை கேலி செய்த அதிமுக (விடியோ)


தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை அதிமுக ட்விட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

அதில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ. 2.63 லட்சம் கடன் இருப்பது, தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ. 87.31 கோடி வட்டி செலுத்துவது, அரசுப் பேருந்து 1 கி.மீ. ஓடினால் ரூ. 59 நஷ்டம் ஏற்படுவது உள்பட பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் வெள்ளை அறிக்கையை கேலி செய்து ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது.

விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com