செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை உச்சம்

செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை உச்சத்தை எட்டியது. குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.8,603-க்கு ஏலம் விடப்பட்டது.
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை உச்சம்
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை உச்சம்

தரங்கம்பாடி: செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை உச்சத்தை எட்டியது. குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.8,603-க்கு ஏலம் விடப்பட்டது.      

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் விற்பனை கூட அலுவலக  பொருப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி  அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 8,603க்கும், சராசரி விலை ரூ.7,750க்கும், குறைந்தபட்சவிலை  ரூ.7400க்கும் விலை போனதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்தனர்.  

 கரோனா காலத்தில் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைத்திட வழிவகை செய்திட்ட தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், துறை செயலர், ஆணையர் மற்றும் அதிகாரிகள், வியபாரிகள்  அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர். மேலும் எதிர்வரும் காலங்களில் தங்களது அனைத்து விதமான விலை பொருள்களையும் விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து இதை போல் நல்ல விலை பெற்றிட ஏதுவாக கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டி தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை, அமைச்சருக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் இந்தப் பருத்தி மறைமுக  ஏலத்தில் ஆந்திரம், மஹாராஷ்ட்ரம், குஜராத் போன்ற வேறு மாநில வியாபாரிகளும், கடலூர், விழுப்புரம், தேனி, சத்தியமங்கலம், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 16 வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விலை பொருளான பருத்திக்கு நல்ல விலைக்கு எடுத்தனர்.  மேலும் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் கூறியதாவது, விவசாயிகள் இதைப்போல் தங்களது விளை பொருள்களான பச்சை பயறு, உளுந்து, எள், நிலகடலை, தேங்காய், முந்திரி போன்ற விளைபொருள்களை எடுத்து வந்து பயன் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com