
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி அடிப்படையில் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்தது.
பின்னர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க | ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, தினசரி அடிப்படையில் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும் சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க | அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கோரிய செந்தில் பாலாஜி