தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்தும் வகையில் 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " தீயணைப்புதுறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தீயணைப்பு சட்டம் முழுவதுமாக மாற்றியமைக்கப்படும்" என்றார்.

காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், "500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சுழல் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். ஈர நிலங்கள் சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com