பட்ஜெட்: ஜூன் 3-ல் கருணாநிதி செம்மொழி விருது

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்: ஜூன் 3-ல் கருணாநிதி செம்மொழி விருது
பட்ஜெட்: ஜூன் 3-ல் கருணாநிதி செம்மொழி விருது

சென்னை: தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்

அதில் அவர் அறிவித்திருப்பதாவது, 
பொது நிலங்களை முறையாகப் பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்.

ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
நிதியாண்டின் எஞ்சிய 6 மாத காலத்துக்கு மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை பொருந்தும்.

எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல் படி அதனை அடையாளம் கண்டு அதன் ஆழத்தை புரிந்து கொள்வதுதான் .

முதல்வர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பதவியேற்றதுமே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றம் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com