பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதை வரவேற்கிறேன்: பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம்

பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதை வரவேற்பதாக தமிழக பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்தேன். 

6 மாதங்களாக நடைமுறையில் உள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அவசியமான சில திருத்தங்களைச் செய்து எஞ்சியுள்ள 6 மாதங்களுக்கு அறிக்கையை நிதி அமைச்சர் தந்திருக்கிறார். இது சிக்கலான, சிரமமான பணி.

பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதையும் வரவேற்கிறேன் 

பெருந்தொற்றின் தாக்கத்தில் மக்கள் இன்னும் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அளித்திருக்கிறார்.

இன்னும் 6 மாதத்தில் தரவிருக்கும் 2022-23 ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் பல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com