மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு
மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் அவர் அறிவித்திருப்பதாவது, 

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

இந்த மகப்பேறுகால விடுப்பு அதிகரிப்பு என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதுடன், இது 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.4.2022 முதல் வழங்கப்படும்.
 

•••
பழனி முருகன் கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 நாள்களில் தமிழக அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோயில்களுக்குச் சொந்தமான 626 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை - கன்னியாகுமரி ஜிஎஸ்டி சாலையை 6 முதல் 8 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

அடுத்த பட்ஜெட், மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் இருக்கும். 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com