கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். 

கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். 3 மணி நேரத்திற்குப் பின்னர் சரியாக பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்தார்.

இதன்பின்னர் அவையை ஒத்திவைப்பதாக தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்று தெரிவித்தார். 

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com