தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் தகவல்

தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
 
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு: 

ஐஐடி உதவியுடன் தமிழ்நாடு ஆளில்லா விமான பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்தின் உதவியுடன் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாகன பூங்கா அமைக்கப்படும்.

காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் 4,500 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும்.

சென்னை காவனுர், நந்தம்பாக்கத்தில் 168 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.

ஓசுரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.

விழுப்புரம், திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அரியலூர், பெரம்பலூரில் 10 கோடி ருபாய் செலவில் புவியியல் புதைபடிவ பூங்கா அமைக்கப்படும்.

கோவையில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா செயல்படுத்தப்படும்.

திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்பும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com