தமிழக பட்ஜெட்: ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்

தமிழகம் முழுவதுமுள்ள 200 குளங்கள் ரூ. 111 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும என  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 
தமிழக பட்ஜெட்: ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்

தமிழகம் முழுவதுமுள்ள 200 குளங்கள் ரூ. 111 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும என  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

இதில் நிலம், நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு குறித்து பேசியஅவர், 

தமிழகத்தில் நிலங்களை மேம்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும். 

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு ரூ. 30 கோடியில் செயல்படுத்தப்படும்; உலக வங்கி நிதியுதவியுடன் நீர்வளத்துறை மேம்படுத்தப்படும். 

நீர்நிலை புனரமைப்புக்கு ரூ.610 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும். 

மொத்தமாக பாசனத் திட்டத்திற்காக  ரூ. 6,607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும். 

நீர் நிலைகளைக் கண்டறியவும் அதைப் பாதுகாக்கவும் ஜிபிஎஸ் முறைகளும், ட்ரோன்களும் உபயோகித்து நெறிமுறைப்படுத்தப்படும். 

மேட்டூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை பழையநிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com