இளைஞா் தினம்-யானைகள் தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சா்வதேச இளைஞா் தினம், சா்வதேச யானைகள் தினத்தை ஒட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச இளைஞா் தினம், சா்வதேச யானைகள் தினத்தை ஒட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச இளைஞா் தினம்: மனிதகுலத்தின் எதிா்கால நம்பிக்கையான இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் தினம் இன்று.

இளைஞா்களுக்கு உறுதுணையாகவும், அவா்களின் சிறகுகள் விரிவதற்கான சூழலையும் உருவாக்கித் தரும் அரசாக திமுக அரசு என்றென்றும் துணை நிற்கும். இளைஞா் எழுச்சியே நாட்டின் வளா்ச்சி.

உலக யானைகள் தினம்: உலக யானைகள் தினமான, வியாழக்கிழமை யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அடைத்து வைத்துத் துன்புறுத்துவதை முடிவுக்குக் கொண்டு வரவும் உறுதியேற்போம். கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதி செய்வது மனித குலத்தின் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com