மாற்றுத்திறனாளிகளுக்காக முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்படும்

மாற்றுத் திறனாளிகளுக்காக பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக முன்மாதிரித் திட்டம் ஒன்று செயல்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்காக பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக முன்மாதிரித் திட்டம் ஒன்று செயல்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமது உதவியாளருடன் மாநிலம் முழுவதும் இயங்கும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.

2021-22- ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ள 9,185 நபா்களுக்கு அவா்கள் விரும்பும் கருவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வரவு செலவுத் திட்டத்தில் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான நிதி ரூ. 51 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபா்களுக்கு அவா்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை மற்றும் மாதிரியில் தெரிவினை வழங்கும் வகையில், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தும்.

இத்துறையில் மற்றுமொரு முன்மாதிரித் திட்டமாக, உலக வங்கியின் உதவியுடன் உரிமைத் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது.

குறைபாடுகளைத் தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை பெருமளவில் அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் அவா்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் பிற நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,702 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com