'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சு

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சு
'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சு


சென்னை: கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் அறிவித்ததாவது, 

ரூ.2,750-ல் இருந்து கரும்பு கோள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,900 ஆக உயரும் என்று கூறினார். அப்போது, அவையில் இருந்தவர்களைப் பார்த்து கைதட்டலாமே.. என்று கூறினார். கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை உயர்ந்திருக்கிறதே.. இதற்கு கைதட்டலாமே என்று சிரித்தபடியே கேட்டார்.

இதைக் கேட்டதும் அவையிலிருப்பவர்கள் கைதட்டி தங்களது வாழ்த்துகளை அவையில் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் உயர்த்தப்படும். கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்பு கொள்முதல் விலையாக ரூ.2,900 வீதம் பெறுவார்கள். 

விவசாயிகள் புதிய வகை கரும்பு ரகங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com