மேட்டூர் அணை நீர்மட்டம் 72.03 அடியாக சரிவு

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை


மேட்டூர் அணை நீர்மட்டம் 72.77அடியிலிருந்து 72.03 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,272 கன அடியாக குறைந்தது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைக்கப்பட்டது. 

இதனால் நேற்று வெள்ளிக்கிழமை காலை  மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,649 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை 7272 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 72.77அடியிலிருந்து 72.03அடியாக குறைந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 34.46 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com