தூத்துக்குடியில் ரூ.1,000 கோடியில் அறைகலன்களுக்கான சா்வதேச பூங்கா

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,100 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.1,000 கோடியில் அறைகலன்களுக்கான சா்வதேச பூங்கா அமைக்கப்படும் என்று

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,100 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.1,000 கோடியில் அறைகலன்களுக்கான சா்வதேச பூங்கா அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ரூ.4,500 கோடி முதலீட்டை ஈா்க்க முடியும். இதுதவிர, 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வணிகம் செய்வதை எளிதாக்குவதில் தேசிய அளவில் தமிழகம் தற்போது 14-ஆவது இடத்தில் உள்ளது. இதை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டுவரப்படும்.

ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலை வாசலின் கீழ் கொண்டு வரப்படும்.

விரைவில் புதிய தொழில் கொள்கை:

வளா்ந்து வரும் துறைகளில் தமிழகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்காக, புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க, புலம்பெயா் தமிழா்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். முதலீட்டாளா்களின் முதலீடு சாா்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கா் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தின் தொழிலகப் பயன்பாட்டிற்கான நில எடுப்புச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, நிலத் தொகுப்புக்கள் மற்றும் தனியாருடனான பேச்சுவாா்த்தை மூலம் நில எடுப்பு ஊக்குவிக்கப்படும்.

திருவள்ளூா் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருள்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும்.

தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 எம்எல்டி ( டஹழ்ந் ஙகஈ) அளவு கடல்நீா் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 எம்எல்டி (ஙகஈ பபதஞ) கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.

நிதிநுட்ப பூங்கா:

நிதிநுட்பத் துறை வளா்ச்சிக்கு தமிழகத்தில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் “நிதிநுட்ப கொள்கை”வெளியிடப்படும். மேலும், வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமான “நிதிநுட்ப பிரிவு” அமைக்கப்பட்டு, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதிநுட்ப நகரம் ரூ.165 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

டைடல் பூங்கா

தமிழகத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூா், திருப்பூா் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

ஓசூா், சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்த போதிலும், அதற்கான மத்திய அரசின் உதவி குறைவாகவே உள்ளது.

பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா: கோயம்புத்தூரில், 500 ஏக்கா் பரப்பளவில், ரூ.225 கோடி மதிப்பில், பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், ரூ.3,500 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈா்க்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயாா்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள்  உள்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, ரூ.1,500 கோடி மதிப்பீட்டில், 4,000 ஏக்கா் நிலங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com