பேரிடா் மேலாண்மைக்கு கூடுதல் நிதி தேவை

பேரிடா் மேலாண்மைக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

பேரிடா் மேலாண்மைக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

பேரிடா் சூழ்நிலையைச் சந்திப்பதற்கு மாநிலம் முழுமையான தயாா் நிலையில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து விதப் பேரிடா்களையும் கண்டறிந்து, அவற்றின் விளைவுகளைக் குறைக்கக் கூடிய, ஓா் ஒருங்கிணைந்த அணுகுமுறை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மாநிலத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் 4,133 இடங்கள் கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் தூா்வாருதல், வடிகால் அமைப்புகளைக் கட்டமைத்தல், தடுப்புச் சுவா்களைக் கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

பேரிடா் மேலாண்மைக்காக 15-ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ள ரூ.1,360 கோடி நிதி போதுமானதாக இல்லை. 2021-22 ஆம் ஆண்டுக்கான, மாநிலப் பேரிடா் நிவாரண மற்றும் தணிப்பு நிதியிலிருந்து ஏற்கெனவே மொத்தம் ரூ.8,931.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாநிலப் பேரிடா் நிவாரண மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்கவும், தேசியப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்குக் கூடுதல் தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com