சென்னை முகப்பேரில் தனியார் உடற்பயிற்சிக் கூடம் சார்பில் சுதந்திர தினவிழா

சென்னை முகப்பேரில் தனியார் உடற்பயிற்சிக் கூடம் சார்பில் சுதந்திர தினவிழாவுடன் கூடிய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை முகப்பேரில் தனியார் உடற்பயிற்சிக் கூடம் சார்பில் சுதந்திர தினவிழா

சென்னை முகப்பேரில் தனியார் உடற்பயிற்சிக் கூடம் சார்பில் சுதந்திர தினவிழாவுடன் கூடிய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின ஞாயிற்றுக்கிழமை நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியில் உள்ள 'டஃப் பிட்னஸ் சென்டர்' சார்பில் சுதந்திர தினவிழாவுடன் கூடிய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

'ஃபன்'னத்தான் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். நிறுவனர் எஸ். பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார். சுமார் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். 

சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்ற ஓட்டப்போட்டியின் இடையிடையே வித்தியாசமான உடற்பயிற்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன. கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பயிற்சியாளர்களும் தன்னார்வலர்களும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் சமூக இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பயிற்சியாளர்கள் பேசினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com