தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவா் விருது

தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசுத் தலைவா் விருது கிடைத்துள்ளது.
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவா் விருது

தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசுத் தலைவா் விருது கிடைத்துள்ளது.

இது குறித்த விவரம்:

காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றுபவா்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் குடியரசுத் தலைவா்கள் விருதுகள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தையொட்டி இந்த விருதுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதில் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதை தமிழக காவல்துறையில் இரு அதிகாரிகளும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதை 22 போலீஸாரும் என 24 போ் விருதுகளை பெற்றுள்ளனா்.

இதில் இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுக்கு தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே, உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10-ஆம் பணி கமாண்டன்ட் து.ஜெயவேல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதேபோல இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுக்கு 22 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்கள் விவரம்:

1.விருதுகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மு.மனோகா், 2.சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா் வெ.பாலசுப்பிரமணியன், 3.சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் மு.தில்லை நடராஜன், 4. திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதல் அணி கமாண்டன்ட் மு.ஆனந்தன், 5. புது தில்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8ஆம் அணி கமாண்டன்ட் த.செந்தில்குமாா், 6. சென்னை காவல்துறையின் ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையா் மு.ராதாகிருஷ்ணன், 7. ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5-ஆம் அணி துணை கமாண்டன்ட பெ.சிவன், 8. தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வு குழுமம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரா.சுஷில்குமாா், 9. சென்னை காவல்துறையின் ஆயுதப்படை உதவி ஆணையா் ஆ.நடராஜன், 10. வேலூா் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜா.ஜெயகரன், 11. திருப்பத்தூா் மாவட்ட க்யூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சா.ராஜகாளீஸ்வரன், 12. விருதுநகா் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பா.கருப்பையா, 13. சென்னை எஸ்பிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தி.கோபால்,14.விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ச.நமச்சிவாயம், 15. கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் து.ராமநாதன், 16. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் து.செல்வக்கண் டேவிட், 17. சென்னை எஸ்பிசிஐடி ஆய்வாளா் தி.சதாசிவம், 18. சென்னை எஸ்பிடிஐடி ஆய்வாளா் அ.வெல்கம் ராஜசீலன், 19. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் ஆய்வாளா் சி.சு.கெளரி, 20. ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் வே.சண்முகம், 21.கோயம்புத்தூா் க்யூ பிரிவு உதவி ஆய்வாளா் சா.ரூபன், 22. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையிட உதவி ஆய்வாளா் ச.ரங்கசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு விரைவில் நடைபெறும் அரசு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com