திமுகவின் 100 நாள் ஆட்சி திருப்திகரமாக இல்லை: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவையில் பா.ஜ.க. சார்பில் மக்கள் ஆசி யாத்திரையினை முன்னிட்டு காமராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது.
திமுகவின் 100 நாள் ஆட்சி திருப்திகரமாக இல்லை: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
திமுகவின் 100 நாள் ஆட்சி திருப்திகரமாக இல்லை: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவையில் பா.ஜ.க. சார்பில் மக்கள் ஆசி யாத்திரையினை முன்னிட்டு காமராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு உள்பட முக்கிய நி்ர்வாகிகள் பங்கேற்றனர்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இன்று முதல் 3 நாள்கள் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகி, காங்கிரஸ் கட்சி இதுவரை அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த  ஒருவரைக் கூட மத்திய அமைச்சர் ஆக்கியது கிடையாது. ஆனால், பாஜக அரசு என்னை நியமித்துள்ளது.

சமூக நீதி பாஜக ஆட்சியில் வென்றுள்ளது. உண்மையான சமூக நீதியை பின்பற்றுபவர் பிரதமர் மோடி. 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நாடு முழுவதும் மக்கள் ஆசியை பெற யாத்திரை செல்கின்றனர். 2014-க்குப் பிறகு நாட்டில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களுக்கான உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கே கொண்டு சேர்க்கப்படுகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எங்களைப் போன்றவர்களை அவையில் அறிமுகம் செய்யக்கூடாது என குழப்பம் விளைவித்தனர். சாதாரண குடும்பத்தைச் சேர்த்தவர்கள் அமைச்சர்களாக வரக்கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் எண்ணமாக உள்ளது.

கரோனா விதிகளை பின்பற்றிதான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பெகாசஸ் என்று இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுகிறார்கள். திமுக 100 நாள் ஆட்சி அவர்கள் சொன்னதை செய்யவில்லை, திருப்திகரமாக இல்லை என்பது என் கருத்து. தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்லி வாக்கை பெற்றுள்ளது திமுக.

பெண்கள், மலைவாழ் மக்கள், ஓபிசி என மத்திய அமைச்சரவையில் சமமாக இடம் வழங்கப்படுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு சர்வதேச விலையைப் பொருத்தே இருக்கும். தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. கூட்டணி குறித்து பாமக ராமதாஸ் சொன்னது அவருடைய கருத்து என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com