மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதிருத்ர சண்டீ யாகம் நிறைவு

பிரத்யங்கிரா தேவி கோயிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகம் திங்கள்கிழமை இரவு நிறைவேற்றியது.
மானாமதுரை பிரித்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகம்
மானாமதுரை பிரித்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகம் திங்கள்கிழமை இரவு நிறைவேற்றியது.

அன்னதானத்திற்கு பெயர்போன மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் 19 ஆவது ஆண்டாக அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகம் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது.

யாகத்தின் முக்கிய நிகழ்வுகளாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி மகா புத்திர காமேஷ்டி யாகம் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் உள்ளிட்ட முக்கிய ஹோமங்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றது.

யாகத்தின் போது தினமும் ஆன்மிக உரை நிகழ்த்திய பிரத்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா அறக்கட்டளை நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள்.
யாகத்தின் போது தினமும் ஆன்மிக உரை நிகழ்த்திய பிரத்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா அறக்கட்டளை நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள்.

யாகத்தின் நிறைவாக கடந்த திங்கள்கிழமை காலை லட்சுமி கணபதி ஹோமம் தொடங்கி அதைத்தொடர்ந்து ஸமக்ரபஷ  சண்டீ யாகம் நடத்தப்பட்டது.  10 நாள்கள் நடைபெற்ற இந்த யாகத்தில் திரவிய பொருள்கள், மூலிகை வகைகள், பட்டுப்புடவைகள், தங்க நகைகள், வெள்ளி நகைகள், இனிப்பு வகைகள், பூமாலைகள், மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் யாக குண்டத்தில் இடப்பட்டன.

யாக நாள்களில் யாகசாலையில் உள்ள பிரத்யங்கிராதேவி உருவப்படம் தினமும் வெவ்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன . பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா அறக்கட்டளை நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் ஒவ்வொரு நாளும் யாகத்தின்போது  யாகங்களின் சிறப்புகள் குறித்து ஆன்மிக உரை நிகழ்த்தினார்.

ஸமக்ரபஷ சண்டீ யாகத்தின் நிறைவாக இரவு பூர்ணாஹுதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாஸினி பூஜை, கன்யா பூஜை நடைபெற்றன.

சண்டீ யாகத்தின் நிறைவாக யாக சாலையில்  சிறுமிகளுக்கு நடைபெற்ற கன்யா பூஜை
சண்டீ யாகத்தின் நிறைவாக யாக சாலையில்  சிறுமிகளுக்கு நடைபெற்ற கன்யா பூஜை

தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் கூடி இந்த யாகத்தை நடத்தினர். யாகத்தில் பூர்ணாஹுதி முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து யாக சாலையிலிருந்து புனிதநீர் கடம் புறப்பாடாகி மூலவர் பிரத்யங்கிராதேவி சன்னதிக்கு சென்றடைந்தது. அங்கு அம்பாளுக்கு புனித நீரால் பாத சமர்ப்பணம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்று பிரத்யங்கிரா தேவியை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா அறக்கட்டளை நிர்வாகி சேகரன் சுவாமிகள் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com