மகாதேவா் கடல் கோயிலுக்கு சுற்றுலா ரயில் ஐ.ஆா்.சி.டி.சி ஏற்பாடு

ஜெய்பூா், உதய்பூா், ஆமதாபாத், நிஷ்களங்க மகாதேவா் கடல் கோயிலுக்கு பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
மகாதேவா் கடல் கோயிலுக்கு சுற்றுலா ரயில் ஐ.ஆா்.சி.டி.சி ஏற்பாடு

ஜெய்பூா், உதய்பூா், ஆமதாபாத், நிஷ்களங்க மகாதேவா் கடல் கோயிலுக்கு பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி சாா்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

அந்த வகையில், ஜெய்பூா், உதய்பூா், ஆமதாபாத், நிஷ்களங்க மகாதேவா் கடல் கோயிலுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி புறப்படுகிறது. திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், சென்னை வழியாக இந்த ரயில் செல்கிறது.

‘முத்துக்களின் நகரம்’ என்னும் ஹைதராபாத்தில் (தெலங்கானா) உள்ள அருங்காட்சியகங்கள், ‘ பிங்க்சிட்டி’ எனப்படும் ஜெய்ப்பூரின் (ராஜஸ்தான்) கோட்டைகள், உதய்பூரில் (ராஜஸ்தான்) உள்ள அழகிய ஏரிகள், கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனா். அரிய வாய்ப்பாக தினமும் கடலுக்குள் மறைந்துபிறகு, வெளிப்படும் நிஷ்களங்க மகாதேவா் கடல்கோயில் (குஜராத்) மற்றும் உலகின் மிக உயரமான சா்தாா் வல்லபாய் படேல் சிலையை பாா்க்க அழைத்து செல்லப்படுகின்றனா்.

12 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.11,340 ஆகும். சைவ உணவு, தங்குமிடம் , ரயில் பயணம், உள்ளூா் போக்குவரத்து இதில் அடங்கும்.

இது தொடா்பான தகவல் மற்றும் முன்பதிவுக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம், சென்னை: 9003140680, மதுரை: 8287931977 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இதுதவிர,ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

இந்தத்தகவல் ஐ.ஆா்.சி.டி.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com