நாளை (ஆக.20) ஓய்வு பெறுகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான என்.கிருபாகரன் நாளை (ஆகஸ்ட் 20) பணி ஓய்வு பெற உள்ள நிலையில் வியாழக்கிழமை பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.
உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்
உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான என்.கிருபாகரன் நாளை (ஆகஸ்ட் 20) பணி ஓய்வு பெற உள்ள நிலையில் வியாழக்கிழமை பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர் என்.கிருபாகரன். 1985ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய என்.கிருபாகரன் 2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு பணி நிரந்தரமாக்கப்பட்டார்.

62 வயதான என்.கிருபாகரன் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் அவர் ஓய்வுபெறுவதையொட்டி சென்னையில் பிரிவு உபசாரவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர் விருப்பு வெறுப்பின்றி வழக்குகளைக் கையாண்டதாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். நீதிபதி என்.கிருபாகரனின் பணி ஓய்வையொட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com