வாழக்கோம்பையில் இணைய வசதியில்லாததால், மலைவாழ் மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்கமுடியாமல் அவதி

வாழக்கோம்பையில் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் நூற்றுக்கணக்கான மலைவாழ்மக்கள்,பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெறிச்சோடும் வாழக் கோம்பை ரேஷன் கடை
வெறிச்சோடும் வாழக் கோம்பை ரேஷன் கடை


தம்மம்பட்டி: வாழக்கோம்பையில் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் நூற்றுக்கணக்கான மலைவாழ்மக்கள்,பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது ஜங்கமசமுத்திரம் ஊராட்சி மன்றம். இதில் வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி, மூலச்செங்காடு, வாழக்கோம்பை காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் 450 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கான ரேஷன் கடை வாழக்கோம்பையில் செயல்படுகிறது. இந்த ரேசன்கடை, தம்மம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படுகிறது. 

இந்த கடை வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் மட்டும் செயல்படும். மற்ற நாள்களில் இதன் விற்பனையாளர்,தம்மம்பட்டி பனந்தோப்பிலுள்ள ரேஷன்கடை பணிக்கு சென்றுவிடுவார். இப்பகுதியைச்சேர்ந்த மலைவாழ்மக்கள், தங்களது ரேஷன் பொருள்களை வாங்கும் நாளில், தாங்கள் செல்லும் தினக்கூலி வேலைக்கு செல்லாமல்,வருமானத்தை இழந்து ரேசன்பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்செல்வர்.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக, இக்கடைக்கு இணைய வசதியில்லாததால், பொதுமக்களின் ஸ்மார்ட்கார்டை அவர்களது இயந்திரத்தில் இணைக்க முற்பட்டால், இணைய வசதியில்லாததால், ரேசன்பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு ஷெட்யூல்டு(மலையாளி) பேரவையின் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் கூறியதாவது: கடந்த இருவாரமாக எங்களால் ரேஷன் பொருள்களை வாங்க முடிவதில்லை. மொத்தமுள்ள 450 குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை ஆகஸ்ட் மாதத்திற்குரிய பொருள்களை வெறும் 200 அட்டைதாரர்கள் மட்டுமே வாங்கியுள்ளனர். எஞ்சியுள்ள 250 குடும்ப அட்டைதாரர்களும் இனி, ஆக.23,24,25 ஆம் தேதிகளில் மட்டும்தான் வாங்கமுடியும். அந்த நாள்களில் இணைய பிரச்னை இருந்தால், இம்மாதத்திற்குரிய ரேஷன் பொருள்களை வாங்கவே முடியாத சூழல் ஏற்படும். 

இப்பகுதிகளில் பெரும்பாலோர் கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.எனவே, தம்மம்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தினர், இக்கடைக்கு வைபை இணைய வசதியை சொந்தமாக நிர்மாணித்து, ரேஷன் பொருள்களை மலைவாழ்மக்களாகிய எங்களுக்கு இடையூறின்றி கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com