சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.
சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்


சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.

சென்னையில், அம்பத்தூர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, கொளத்தூர், மூலக்கடை, மதுரவாயல், திருவொற்றியூர், மாதவரம் உள்பட பல இடங்களில் மழைக் கொட்டியது.

ஒரு சில மணி நேரங்களே மழை பெய்திருந்தாலும், சென்னையின் தாழ்வான மற்றும் மழை நீர் செல்ல வடிகால் வசதியில்லாதப் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் காலையில் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

சென்னையில், தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த தண்ணீரை அகற்றும் பணியில், சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் சூப்பர் சக்கர் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றி, பல இடங்களில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

சேத்துப்பட்டு மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துகொண்டதால், இன்று காலை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com