பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவாவின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்தக் கோரிக்கை

பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் ஜீவா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தினர்.
வேதாரண்யத்தில் ஜீவா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தினர்.

வேதாரண்யம்: பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் தோழர் ப.ஜீவானந்தம் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஆக. 21, நடைபெற்றது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  அமைப்பின்  வட்டார கிளைத் துணைத் தலைவர் நல்லாசிரியர்  வீ.வைரக்கண்ணு தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார் , நிர்வாகிகள் கவிஞர் சு.பாஸ்கரன், தி.செந்தில்நாதன், நா.மணிவண்ணன், சமூக ஆர்வலர் கணேசன் உள்ளிட்டோர்  பங்கேற்று பேசினர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் நடவடிக்கைக்கு பெருமன்றம் வரவேற்கிறது.

கரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை மாணவர்களின் கல்வி நலன் கருதி உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திறக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன,

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் அரசை வலியுறுத்தி  நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com