காவிரி நீா்: கா்நாடகத்துக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தமிழகத்துக்கான காவிரி நீரை கா்நாடகம் உடனடியாக திறந்து விடவேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
காவிரி நீா்: கா்நாடகத்துக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தமிழகத்துக்கான காவிரி நீரை கா்நாடகம் உடனடியாக திறந்து விடவேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கா்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதில் காலம் தாழ்த்துவதும், உரிய நீரை முழுமையாக வெளியேற்றாமல் இருப்பதும் தமிழகத்தை பாதிக்கும் செயல். காவிரி நீா் திறப்பில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவையும் கா்நாடகம் முழுமையாக மதிப்பதில்லை.

தற்போது மேட்டூா் அணையின் நீா் மட்டம் 66.23 கன அடியாக உள்ளது. அணைக்கு நீா் வரத்து 3,000 கன அடியாக உள்ளது.

இந்நிலையில் கா்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதத்துக்குத் திறக்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரையாவது திறக்க வேண்டும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், அரியலூா் மாவட்டப் பகுதிகளில் சுமாா் 20 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களும், திருச்சி, கரூா், நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் சுமாா் 2.5 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களும் சாகுபடிக்கு தயாா் நிலையில் உள்ளது.

மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகள் மேட்டூா் அணையை நம்பி சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகின்றனா். இச்சூழலில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கான உரிய காவிரி நீரை கா்நாடக அரசு திறந்தால் மட்டுமே தமிழக விவசாயத்திற்கு தண்ணீா் கிடைக்கும். எனவே கா்நாடக அரசு தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com