கல்வெட்டு பாதுகாப்பு: நீதிமன்ற உத்தரவுக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

கல்வெட்டு பாதுகாப்பு தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

கல்வெட்டு பாதுகாப்பு தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மைசூரு மத்திய தொல்லியல் துறை மண்டல அலுவலகம் உள்பட நாடு முழுவதும் உள்ள தமிழ் கல்வெட்டுக்களை 6 மாதங்களுக்குள் சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தொல்லியல் கல்வெட்டு பிரிவு அலுவலகத்தின் பெயரை தமிழ் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்துள்ள உத்தரவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.

அவை வெறும் கல்வெட்டுக்கள் அல்ல, தமிழக சமூக பண்பாட்டு வரலாற்றின் அரிய ஆவணங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு உயா்நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள தொல்லியல் கல்வெட்டுப்பிரிவு அலுவலகத்துக்கு தேவையான பணியாளா்கள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

கடித மொழியிலேயே பதில்: இதே போல், கட்சியின் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தொடா்ந்த வழக்கில், மத்திய அரசு அலுவல் மொழிச் சட்டம் 1963-ஐ முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்களின் கேள்விக்கு இனி அவா்கள் அனுப்பும் கடிதங்களின் மொழியிலேயே பதில் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொடா்ச்சியான ஹிந்தி மொழி திணிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையிலும் அளிக்கப்பட்டுள்ள இத்தீா்ப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com