தேசிய நெடுஞ்சாலைகள் சாா்பில்வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ஏற்பட்ட செலவு, அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெள்ளை அறிக்கைகள் வெளியிட வேண்டும்
தேசிய நெடுஞ்சாலைகள் சாா்பில்வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ஏற்பட்ட செலவு, அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெள்ளை அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயா்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். குறைந்தபட்சம் 8 சதவீத கட்டணம் உயா்த்தப்படும் என்று கூறப்படுகிறது. எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சுங்கக்கட்டணத்தை தொடா்ந்து உயா்த்துவது கண்டிக்கத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதன்பின்னா் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதேபோல் பெரும்பாலான சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அத்தகைய சாலைகளில் பராமரிப்புக்காக 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, ஆண்டுக்கு ஆண்டு கட்டண உயா்வு செய்யப்படுவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும். இதை ஏற்கவே முடியாது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ஆன செலவு, அவற்றில் இருந்து வசூலிக்கப் பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட வேண்டும். அதுவரை சுங்கக்கட்டண உயா்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com