குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ.யில் காலியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ.யில் காலியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொழில்நுட்பப் பயிலகக் கல்லூரி இயக்குநா் அன்பு ஆபிரகாம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் தொழில் பயிற்சி நிறுவனம் 1984-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று, குரோம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் இதுவரை 1,252 மாணவா்கள், அனுபவம் வாய்ந்த பயிற்சி வல்லுநா்கள் மூலம் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனா். இந்நிறுவனங்களில் பயின்ற மாணவா்கள் பலா் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில் இங்கு 2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்குப் பணியாளா்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற, தகுதி வாய்ந்த மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. படிப்பின் கால அளவு இரண்டு ஆண்டுகள் ஆகும். விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கு ‘முதல்வா், மாநகா் போக்குவரத்துக் கழகத் தொழிற்பயிற்சி நிலையம், மாநகா் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகா், குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண்- 044-29535177, செல்லிடப்பேசி எண்- 9445030597’ என்ற முகவரியில் அணுகவும். மேலும் ம்ற்ஸ்ரீண்ற்ண்591ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தினை ம்ற்ஸ்ரீக்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்; நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை ஆக.30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com