வில்லிவாக்கம், கொளத்தூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது

வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து. 2 சவரன் எடை கொண்ட 2 தங்கச் சங்கிலிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம், கொளத்தூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது
வில்லிவாக்கம், கொளத்தூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது

வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து. 2 சவரன் எடை கொண்ட 2 தங்கச் சங்கிலிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னை, வில்லிவாக்கம், பெருமாள் கோயில் வடக்கு மாட தெருவில் வசிக்கும் அனுசுயா, 18ஆம் தேதி, வீட்டின் அருகே கிழக்கு மாட வீதியில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அனுசுயாவின் கழுத்திலிருந்த 1 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். 

இது குறித்து அனுசுயா, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதில் பதிவாகியிருந்த குற்றவாளியின் அடையாளங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு தீவிர விசாரணை செய்து, மேற்படி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில் குற்றவாளி அரவிந்த்குமார் அதே நாளில் கொளத்தூர் பகுதியிலும் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த 1 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது தொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்தது.

அதன்பேரில், குற்றவாளியிடமிருந்து 2 சவரன் எடை கொண்ட 2 தங்கச்சங்கிலிகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி 1 பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் குற்றவாளி அரவிந்த்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com