சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சீர்காழி: சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சாலைகளில் ஆகிய கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஈசானிய தெருவில் உள்ள கம்போஸ்டில் கொட்டப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மாதம் முதல் தனியார் துப்புரவு ஊழியர்களைக் கொண்டு குப்பைகள் சேகரிக்கும் பணியை ஒரு மகளிர் சுய உதவிக்குழு மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதனிடையே இன்று தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள்  நகராட்சி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது பேசப்பட்டபடி ரூபாய் 420 நாள்  ஒன்றுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சீர்காழி நகர் பகுதியில் இன்று குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com