கம்பத்தில் போலி பீடி விற்பனை: இளைஞர் கைது; ரூ.1.67 லட்சம் பண்டல்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பத்தில் போலி பீடி பண்டலங்கள் விற்பனை செய்த இளைஞரை தெற்கு காவல்துறையினர் கைது செய்து ரூபாய் 1.67 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.
கம்பத்தில் போலி பீடி விற்பனை: இளைஞர் கைது; ரூ.1.67 லட்சம் பண்டல்கள் பறிமுதல்
கம்பத்தில் போலி பீடி விற்பனை: இளைஞர் கைது; ரூ.1.67 லட்சம் பண்டல்கள் பறிமுதல்


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் போலி பீடி பண்டலங்கள் விற்பனை செய்த இளைஞரை தெற்கு காவல்துறையினர் கைது செய்து ரூபாய் 1.67 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரபலமான பீடி நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக  பீடி  கம்பெனி நிறுவனங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தேனி ஒயிட் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த செய்யது பீடி நிறுவன மேலாளர் அற்புதனந்தா கம்பம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது கம்பம் கே.வி.ஆர். தெருவில் உள்ள நாகூர்கனி என்பவரது வீட்டில் போலி பீடிகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த பீடி பண்டல்களை சோதனை செய்தபோது, மலபார், 5 பூ மார்க், கணேஷ், போட்டோ நிறுவனங்களின் பெயரில் ரூபாய் 1 லட்சத்து 67 ஆயிரத்து 820 மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள்  வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி பீடி நிறுவன மேலாளர் அற்புதனந்தா கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா வழக்கு பதிவு செய்து, இளைஞர்  நாகூர் கனியை திங்கள்கிழமை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பீடி பண்டல்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com