கொல்லிமலை அடுக்கம் குக்கிராம மலைவாழ் மக்களின் தாகம் தீர்த்துவரும் சாமி பாலி!

தம்மம்பட்டி அருகே கொல்லிமலையில் அடுக்கம் கிராமத்தில் பல வருடங்களாக அப்பகுதி மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது ஒரு பாலி.
தம்மம்பட்டி அருகே கொல்லிமலையில் அடுக்கம் குக்கிராமத்தில் மலைவாழ் மக்களின் தாகம் தீர்த்துவரும் சாமி பாலி
தம்மம்பட்டி அருகே கொல்லிமலையில் அடுக்கம் குக்கிராமத்தில் மலைவாழ் மக்களின் தாகம் தீர்த்துவரும் சாமி பாலி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே கொல்லிமலையில் அடுக்கம் கிராமத்தில் பல வருடங்களாக அப்பகுதி மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது ஒரு பாலி.

தம்மம்பட்டிக்கு மிக அருகில் உள்ளது கொல்லிமலை. மலை முழுவதும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தினை சேர்ந்தது. இதன் கடைசி எல்லை ஊர் அடுக்கம் என்ற குக்கிராமம். குண்டனி நாடு என்ற ஊராட்சிக்குள்பட்டது.

அடுக்கம் கிராமத்தில் வெறும் 37 குடியிருப்புகள் மட்டுமே உள்ளன. 120 பேருக்கும் குறைவாகவே வசிக்கின்றனர். இந்த அடுக்கம் மலைக் கிராமத்திற்கு செல்ல, 50 வருடங்களுக்குப் பிறகு, சேலம் மாவட்ட எல்லையான வாழக்கோம்பையிலிருந்து கடந்த நான்கு மாதம் முன்புதான் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.

இங்கு பல வருடங்களாக, சோலார் விளக்குகள் இருந்து வந்தது. அதுவும் பழுதடைந்துவிட்டன. மின்சாரம் இல்லாத 50 வருடங்களுக்கு மேலாக தண்ணீர் வசதியில்லாமல் இருந்து வந்தது. அதனால் இங்குள்ள பெருமாள் கோவில் அருகே நல்ல தண்ணீர் ஊற்றெடுக்கும் சுணை உள்ளது. அதனை பாலி என்றும் மலைவாழ்மக்கள் அழைக்கின்றனர்.

பாலியை இத்தனை வருடங்களாக தொடர்ந்து சாமி பாலி என்று அழைத்து வருகின்றனர். அடுக்கம் மலைவாழ்மக்கள் கூறியதாவது: இங்கு தண்ணீர் இல்லாத காலத்தில் எங்களின் தாகத்தை இந்த பாலிதான் தீர்த்து வந்தது. இந்த பாலியில் இருந்து வரும் நீர் மிகவும் சுத்தமான குடிநீர். எங்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமான குடிநீர் இந்த பாலியில் இருந்துவரும் தண்ணீர்தான். இந்த பாலியில் ஊற்று நீர் நிரம்பினால், நாங்கள் வைத்த இரும்புக்குழாய் வழியே நீர் வெளியேறும்.

எங்கள் கோவில் திருவிழாவின்போது, இந்த பாலியை சாமியாக கருதி வழிபாடு செய்வோம். தற்போது மின்சார இணைப்பும், வேறு இடத்தில் கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து கிடைத்த தண்ணீரை பயன்படுத்திவந்தாலும், தற்போது மின்தடை ஏற்படும் நேரங்களில், எங்களுக்கு பெரிதும் கைகொடுத்து வருவது ,இந்தப்பாலியில் இருந்து கிடைக்கும் குடிநீர்தான். அதனால் தான் பாலியைச் சுற்றி 23 வருடங்களுக்கு முன்னர்,க ருங்கற்களால் சுவர் அப்போது இருந்து பாலியை பாதுகாத்து வருகின்றோம். எங்களது குலத்தை காக்கும் சாமியாக இந்த பாலி இருந்து வருகின்றது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com