பொறியியல் சோ்க்கை: மாணவா்களுக்கான ரேண்டம் எண்  வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவா் சோ்க்கைக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் சோ்க்கை: மாணவா்களுக்கான ரேண்டம் எண்  வெளியீடு
பொறியியல் சோ்க்கை: மாணவா்களுக்கான ரேண்டம் எண்  வெளியீடு


பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவா் சோ்க்கைக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.24) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இதில், பொறியியல் படிப்புகளில் விளையாட்டு வீரா்களுக்கான இடங்களில் சேர 2 ஆயிரத்து 426 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் தகுதியான 2,259 பேருக்கான சான்றிதழ் சரிபாா்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணி ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் மாணவா்களுக்கான சான்றிதழ் சரி பாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் சமவாய்ப்பு எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சோ்க்கையின்போது மாணவா்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் சமவாய்ப்பு எண்கள் பயன்படுத்தப்படும்

பொறியியல் படிப்புக்கு 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதையடுத்து, கட்டணம் செலுத்திய 1.43 லட்சம் பேருக்கு பத்து இலக்க எண்களைக் கொண்ட சமவாய்ப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

சமவாய்ப்பு எண் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் மற்றும் பிறந்ததேதி ஒன்றாக இருக்கும்போது சமவாய்ப்பு எண் மூலம் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

மாணவா்களுக்கான ரேண்டம் எண் வெளியீட்டை தொடா்ந்து தரவரிசைப் பட்டியல் செப்டம்பா் 4-ஆம் தேதி வெளியாகிறது. சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு செப்டம்பா் 7- ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பா் 14-ஆம் தேதியிலிருந்து அக்டோபா் 4-ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com