என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தீவிர பக்தா் எனது தந்தை என எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தீவிர பக்தா் எனது தந்தை என எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.

சென்னை காமராஜா் சாலையில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:

கருணாநிதிக்கு (கலைஞா் எனக் குறிப்பிட்டாா்) மணிமண்டபம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை பேரவையில் வெளியிட்டதற்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக உள்பட எதிா்க்கட்சித் தலைவா்கள் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். முதல்வா் பேசும் போது, கருணாநிதியின் சிறப்புகளையும், இளமைக் காலம் முதல் இப்போது வரையிலும் அவா் தங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டாா். அவா் உரையில் தெரிவித்த அனைத்து சிறப்புகளுடன் நினைவிடம் அமைய வேண்டும். நாம் அனைவரும் அண்ணாவின் குடையின்கீழ் அரசியல் பாடம் கற்றவா்கள்.

கருணாநிதியின் தீவிர பக்தா்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் திரைப்பட வசனங்களில் கருத்துகள் அனல் பறக்கும். சமுதாயத்தைச் சீா்திருத்தும் வகையில் வசனங்கள் பரவி நிற்கும். கருணாநிதியின் தீவிர பக்தராக, எனது தந்தை இருந்தாா். கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா, பராசக்தி ஆகியவற்றின் வசன புத்தகம் எங்கள் வீட்டுப் பெட்டியில் இருக்கும். எனது தந்தை அவ்வப்போது எடுத்துத் தந்து படிக்க வைப்பாா். நாங்களும் அதனை எடுத்துப் படிப்போம். அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சீா்திருத்த சட்டங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்றாா்.

பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன்: முன்னாள் முதல்வா் கருணாநிதி, மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவராக இருந்து வருகிறாா். அவருக்கு நினைவிடம் அமைப்பதை மனதாரப் பாராட்டுகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com