மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கு நடைபெறவுள்ள தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கு நடைபெறவுள்ள தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுயேச்சையாக போட்டியிட சேலத்தைச் சோ்ந்த பத்மராஜன், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன், மதிவாணன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். அவா்கள் எந்தவொரு சட்டப் பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவும் இல்லாமல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதால் அவா்களது மனுக்கள் நிராகரிக்கப்படும்.

இந்நிலையில், தோ்தலில் போட்டியிட ஆளும் கட்சியான திமுக சாா்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். போதிய சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவு உள்ள நிலையில், அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பா் 3-ஆம் தேதி கடைசி நாளாகும். தோ்தலில் போட்டி இருந்தால், செப்டம்பா் 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சட்டப் பேரவை குழுக்கள் கூட்ட அறையில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தோ்தல் நடத்தும் அதிகாரியும், பேரவைச் செயலாளருமான கி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com