வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறப்பு

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. 
வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறப்பு

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டநிலையில்  தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று காலை 9 மணி முதல் பொதுமக்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, பூங்கா இயக்குநர் கருணபிரியா கூறுகையில்,

பூங்காவிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் வழங்கப்படுகிறது. முகக்கவசமும் வைக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. 

இவ்வாறாக பூங்காவில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் பூங்காவில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் சேகரிக்கப்படுகிறது. 

பூங்காவில் வாகனங்களில் செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.  புலி, மான், சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கும் பகுதிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com