கும்மிடிப்பூண்டி: ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டி: ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி: ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேர்வழி கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ தாட்சாயணி அம்பிகை சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேர்வழி கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ தாட்சாயணி அம்பிகை சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் சில நூற்றாண்டிற்கு முன் தீர்த்தத்தில் இருந்து சுயம்புவாய்  வெளிப்பட்ட லிங்கத்தை அப்பகுதி மக்கள் காலம் காலமாய் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் சைவ மெய்யன்பர்கள், தேர்வழி கிராம மக்கள் அந்த சிவலிங்கத்னை கோவில் கட்டி அதில் வைத்து வழிபட நினைத்து சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் அருள்மிகு ஸ்ரீ தாட்சாயணி அம்பிகை சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினர். மேலும் இந்த ஆலய வளாகத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ பைரவர்,  நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சன்னதி கட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆலயத்தின் மகாகும்பாபிஷேகத்தை ஒட்டி செவ்வாய்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, கரிவலம், புதிய பிம்பங்களுக்கு கண் திறத்தல்,  யாகசாலை நிர்மானம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், பிம்ப பிரதிஷ்டை, முதற் கால யாக சாலை பூஜைகள், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், தத்வார்ச்சனை, நாடி சந்தனம், பூர்ணாஹுதி, திரவ்யாஹூதி, பிரசாதம்  வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், குடப்புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் சிவ நாமம் முழங்க புனித நீர் அனைத்து கோபுரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஹேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அருள்மிகு  ஸ்ரீ தாட்சாயணி அம்பிகை சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் பெருமானுக்கும், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரணியர், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ பைரவர், நவக்கிரகங்கள், மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டதோடு, மகாபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்வில் தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா குமார், ஒன்றிய கவுன்சிலர் அமலா சரவணன், திமுக நிர்வாகி ரமேஷ், சி.கருணாகரன், தொழிலதிபர் ஏ.வி.முனிராஜன் உள்ளிட்டோரும், தேர்வழி, கும்மிடிப்பூண்டி நகரம், ஆத்துப்பாக்கம், தம்புரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், தேர்வழி கிராம பொதுமக்கள் வெகு சிறப்பாக நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com