காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்

ஜெயலலிதா பல்கலை. விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்
காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்


சென்னை: ஜெயலலிதா பல்கலை. விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான விவாதத்தின் போது, ஜெயலலிதா பல்கலை விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாக அதிமுக உறுப்பினர் கே.பி. அன்பழகன் பேசினார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் தமிழகத்தில் அதே பெயரில் இப்போது இருந்திக்காது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் திமுக அரசுக்கு இல்லை. விழுப்புரம் பல்கலைக்கழக விவகாரத்திலும் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று விளக்கமளித்தார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் வலியுறுத்தினர். ஆனால், ஜெயலலிதா பல்கலைக் கழகம் தொடர்ந்து செயல்படாது என்று அமைச்சர் க. பொன்முடி பேரவையில் அறிவித்தார். 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர வலியுறுத்தியும், தொடராது என்று அறிவித்ததால், பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக விழுப்புரத்தில் ஆளுநர் அனுமதியுடன் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தோம். ஆனால், ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு செயல்படுகிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com