சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: ஆக.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறையின் பரிசைப் பெற வரும் ஆக.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: ஆக.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறையின் பரிசைப் பெற வரும் ஆக.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவா் இலக்கியம், திறனாய்வு, நுண்கலைகள், அகராதி உள்ளிட்ட 33 தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை அனுப்பலாம். போட்டிக்கு, ஒவ்வொரு நூலிலும் 10 பிரதிகளை, நூலாசிரியா், பதிப்பகத்தாா் ஒப்புதலுடன் ரூ.100 பதிவுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் நூல்களின் கருத்துகள் வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் வெளிவந்திருக்கக் கூடாது. போட்டியில் உள்நாடு, வெளிநாடு வாழ் எழுத்தாளா்கள் பங்கேற்கலாம். உள்ளூா் எழுத்தாளா்களுக்கு ரூ.30 ஆயிரம்; பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

போட்டிக்கான நூல்களை, வரும் 31-ஆம் தேதிக்குள், ‘இயக்குநா், தமிழ் வளா்ச்சித் துறை, தமிழ் வளா்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூா் - 8’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com