முறிந்த எலும்பை இணைக்கும் ஆராய்ச்சியில் வெற்றி: கும்மிடிப்பூண்டி இளைஞருக்கு பாராட்டு 

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வைத்திநாதன்(21) என்கிற உயிரியல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவர் முறிந்த எலும்புகளை 15 நாள்களுக்குள் ஒட்ட வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி .
வைத்திநாதன்
வைத்திநாதன்


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வைத்திநாதன்(21) என்கிற உயிரியல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவர் முறிந்த எலும்புகளை 15 நாள்களுக்குள் ஒட்ட வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியரின் மகன் வைத்தியநாதன். இவர் தஞ்சை சாஸ்திரா பல்கலைகழகத்தில் உயிரியியல் தொழில்நுட்ப படிப்பில்  இறுதி ஆண்டு படித்து வருகிறார். 

வைத்தியநாதன், உயிரியியல் தொழில்நுட்ப துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்த அறிக்கை, உயிரியியல் தொழில்நுட்ப துறையில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

எலுப்பு முறிவு சிகிச்சையில், முறிந்த எலும்புகள் ஒன்று கூட, ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். இதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, முறிந்த எலும்புகள் விரைந்து கூடுவதற்கான ஆராய்ச்சியை, வைத்தியநாதன் தேர்வு செய்தார்.

இவரது தீவிர ஆராய்ச்சியின் பலனாக, எலுப்புகளை விரைந்து கூட வைக்கும், ‛கய்டோசன்’ என்ற பயோ பாலிமருடன், தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‛சில்வர் நானோ துகள்கள்’ கலந்து, தயாரித்த கலவையை, முறிந்த எலுப்புகளுக்கு இடையே நிரப்ப வேண்டும். அப்படி செய்தால், முறிந்த எலுப்புகள், 15 நாள்களுக்குள் ஒன்று கூடும் என ஆராய்ச்சி மீதான அறிக்கையை, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பல்கலைகழகத்தில் வைத்தியநாதன் சமர்ப்பித்தார்.

அவரது ஆராய்ச்சியை, மத்திய அரசின் உயிரியியல் தொழில்நுட்பத் துறை அங்கிகரித்தது. இதையடுத்து, 2021 ஆம் ஆண்டின் இளம் சாதனையாளர் விருதான ‛இன்ஸ்ட்டியூட் ஆப் ஸ்காலர்ஸ்’ விருதினை வழங்கியது. 

அதனைத் தொடர்ந்து பாக்ஸ் க்ளூஸ் மற்றும் ஜி நியூஸ் இணைந்து, 2021 ஆம் ஆண்டின் ‛இந்தியா பிரைம் குவாலிட்டி எஜூகேஷன்’ விருதினை வைத்தியநாதனுக்கு வழங்கியது. 

கும்மிடிப்பூண்டி மாணவனின் உயிரியியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பால், அவருக்கு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து குவிந்து வருகிறது.

இது குறித்து வைத்தியநாதன் கூறுகையில், ‛பள்ளியில் படிக்கும் போதே உயிரியில் தொழில்நுட்ப பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கனவோடு, அந்த படிப்பில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டு படிக்கும் போதே, ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் என்னை தயார் செய்தேன். எனது பேராசிரியர் முனைவர் சரவணன்சேகரன் வழிகாட்டுதலும், சக மாணவர்களின் ஊக்கமுமே எனது ஆராய்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். 

மேலும் பல புதிய ஆராய்ச்சிகள் மேற்கொண்ட உயிரியியல் தொழிநுட்பத்தில் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும் என்பது எனது லட்சியம்’ என வைத்தியநாதன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com