கிருஷ்ண ஜெயந்தி: மாட்டுத்தொழு கோயிலில் பட்டத்துக்காளை, கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் கம்பத்தில் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு பட்டத்துக்காளை மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளை
கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளை


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு பட்டத்துக் காளை மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ளது நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயில்.

திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பட்டத்துக் காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.  பின்னர் தம்பிரான் கோயிலிலுள்ள கொடிமரத்திற்கு 15 வகையான பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஒக்கலிகர் மகாஜன சங்க நிர்வாகிகள், கோயில் அறங்காவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் மட்டும் கலந்து கொண்டனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் கரோனா தொற்று பரவல்  கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள், பொதுமக்கள் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com