மழை, வெள்ளத்தைத் தொடர்ந்து சென்னையை அடுத்து தாக்கவிருக்கும் அபாயம்

சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீளாத நிலையில், அடுத்த அபாயம் காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மழை, வெள்ளத்தைத் தொடர்ந்து சென்னையை அடுத்து தாக்கவிருக்கும் அபாயம்
மழை, வெள்ளத்தைத் தொடர்ந்து சென்னையை அடுத்து தாக்கவிருக்கும் அபாயம்


சென்னை: சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீளாத நிலையில், அடுத்த அபாயம் காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் பரவலாக தேங்கியிருப்பதால், லார்வா எனப்படும் கொசுப்புழக்கள் அதிகம் உற்பத்தியாக வழி ஏற்படும் என்றும், அதனால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ரஜனி எம். நம்பியார் கூறுகையில்,உடனடியாக சென்னை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகள எடுக்காவிட்டால்,  சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரில் ஏராளமான கொசு புழக்கள் வளர்ந்து, டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு மற்றும் கொசு ஒழிப்பு புகையை பரப்புவது போன்றவை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொசு பரவலைத் தடுப்பதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் சென்னை மாநகராட்சி கையாண்டு, புதிய யுக்திகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com