மானாமதுரை அருகே உப்பாற்றில் உடைந்த கரைகள் சீரமைப்பு: தண்ணீர் வெளியேறுவது நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உப்பாற்றில் உடைந்த கரைகள் மணல் மூட்டைகளை வைத்து அடுக்கி சீரமைக்கப்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீர் நிறுத்தப்பட்டது.
மானாமதுரை அருகே செய் களத்தூர் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட உப்பாற்றின் கரைகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.
மானாமதுரை அருகே செய் களத்தூர் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட உப்பாற்றின் கரைகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உப்பாற்றில் உடைந்த கரைகள் மணல் மூட்டைகளை வைத்து அடுக்கி சீரமைக்கப்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீர் நிறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகி மானாமதுரை ஒன்றியம் பெரியகோட்டை கிராமத்தின் வழியாக வைகை ஆற்றுக்கு சென்று கலக்கும் உப்பாற்று தண்ணீர் மானாமதுரை அருகே செய்களத்தூர் என்ற இடத்தில் ஆற்றுக்கு செல்லும் வழியில் இரு இடங்களில் கரைகள் உடைந்து செய்களத்தூர், கள்ளர்வலசை உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

ஏற்கனவே மழையால் இந்த கிராமங்களைச் சூழ்ந்து நிற்கும் தண்ணீருடன் உப்பாற்று வெள்ள நீரும் சேர்ந்ததால் மேற்கண்ட கிராமங்களில் வீடுகள், விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அந்த கிராமங்கள் தீவுகளாகின. 

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் கார்களில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட முடியாததால் பைக்குகளில் சென்று செய்களத்தூர், கள்ளர்வலசை கிராமங்களில் வெள்ள பாதிப்புகளையும் உப்பாற்றில் உடைந்த கரைகளையும் பார்வையிட்டனர்.

மணல் மூட்டைகளை அடுக்கி உப்பாற்றின் கரைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.

அதன்பின் உப்பாற்றில் உடைந்த கரைகளை அடைத்து சீரமைக்க
ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறையினர் கிராம மக்களுடன் இணைந்து வெளியிடங்களில் இருந்து மணல் மூட்டைகளை கொண்டு வந்து கரைகள் உடைந்த இடங்களில் அடுக்கி உப்பாற்றின் கரைகளை சீரமைத்தனர். 

இதையடுத்து  வெள்ளநீர் செய்களத்தூர் கள்ளர்வலசை உள்ளிட்ட கிராமங்களுககுள் திரும்புவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com