அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன்

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக அ.தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டு, அவா் தலைமையில் அக் கட்சியின் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக அ.தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டு, அவா் தலைமையில் அக் கட்சியின் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்று அவைத் தலைவா் பதவியாகும். அக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் அவைத் தலைவா் தலைமையில் நடைபெற வேண்டும் என்பது விதியாகும்.

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனனின் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவி காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டு, அவா் தலைமையில் புதன்கிழமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அவருக்கு வாழ்த்து கூறினா்.

1972-இல் எம்ஜிஆா் அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழ்மகன் உசேன் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறாா். எம்ஜிஆா் மன்றச் செயலாளராக முதல்முறையாக நியமிக்கப்பட்டவா் உசேன். 47 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தாா். 17 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்துள்ளாா்.

2012-இல் வக்ஃபு வாரிய குழுத் தலைவராக இருந்துள்ளாா். தற்போது அனைத்துலக எம்ஜிஆா் மன்றச் செயலாளராக இருந்து வருகிறாா்.

குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ன் காரணமாக எல்லைப் போராட்ட வீரருக்கான உதவித் தொகையை உசேன் பெற்று வருகிறாா்.

அதிமுகவில் 2021-ஆம் ஆண்டுக்கான பெரியாா் விருது உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழுவில் தற்காலிகமாக அல்லாமல் முறையாக அவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com