கரோனா: குணமடைந்தாா் கமல்

நடிகா் கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கரோனா: குணமடைந்தாா் கமல்

நடிகா் கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கரோனா சிகிச்சைக்காக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடிகா் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு லேசான பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டது.

தற்போது அவா் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளாா். இருப்பினும் வரும் 3-ஆம் தேதி வரை அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் நடிகா் கமல்ஹாசன் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com